பறிக்கப்பட்டது இளவரசர் அண்ட்ரூவின் பட்டம்!
பிரித்தானிய மன்னர் சார்லஸ், தனது தம்பி அண்ட்ரூவின் இளவரசர் பட்டத்தை பறித்து, அவரது விண்ட்சர் வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் அவருக்கு உள்ள தொடர்புகள் காரணமாக, அரச குடும்பத்தை அவர் விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.
சார்லஸின் தம்பியும், மறைந்த மகாராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனுமான 65 வயதான அண்ட்ரூ, சமீபத்திய ஆண்டுகளில் தனது நடத்தை மற்றும் மறைந்த பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் காரணமாக கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தார்.
எதிரான நடவடிக்கை
இதனையடுத்து, இந்த மாத தொடக்கத்தில் அவர் யோர்க் டியூக் என்ற பட்டத்தை தொடர்ந்தும்; பயன்படுத்துவதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்தநிலையில், சார்லஸ் இப்போது அண்ட்ரூவுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார், இதன் காரணமாக இளவரசர் என்ற பட்டத்தை துறந்து அண்ட்ரூ மவுண்ட்பேட்டன் விண்ட்சர் என்று இனி அழைக்கப்படுவார்.

இந்தநிலையில் லண்டனுக்கு மேற்கே உள்ள விண்ட்சர் எஸ்டேட்டில் உள்ள தனது ரோயல் லொட்ஜ் மாளிகையை திருப்பி ஒப்படைக்க அண்ட்ரூவுக்கு முறையான அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் உள்ள மாற்று தனியார் தங்குமிடத்திற்கு செல்வார் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை தெரிவித்துள்ளது.
புற்றுநோய்க்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் மன்னரின் இந்த முடிவு, நவீன பிரித்தானிய வரலாற்றில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிரான மிகவும் வியத்தகு நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
குற்றச்சாட்டு
இதேவேளை அண்ட்ரூ தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்தாலும், இந்த கண்டனங்கள் அவசியமானதாகக் கருதப்படுவதாக அரண்மனை கூறியுள்ளது.
அண்ட்ரூ ஒரு காலத்தில் ஒரு துணிச்சலான கடற்படை அதிகாரியாகக் கருதப்பட்டார் மற்றும் 1980 களின் முற்பகுதியில் ஆர்;ஜென்டினாவுடனான போல்க்லாந்து போரின் போது இராணுவத்தில் பணியாற்றினார்.

இந்தநிலையில் எப்போதும் மறுத்து வந்த பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் 2022 இல் அவரது இராணுவ தொடர்புகள் மற்றும் அரச ஆதரவுகள் நீக்கப்பட்டன.
முன்னதாக,1936 ஆம் ஆண்டில், விவாகரத்து பெற்ற அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்காக அரியணை ஏறிய ஒரு வருடத்திற்குப் பின்னர் எட்வர்ட் ஏஐஐஐ பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அவர் விண்ட்சர் டியூக் என்ற பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார், எனினும்; பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        