யாழ். பல்கலையில் பரபரப்பு! 20 வருடங்களின் பின்னர் வெளிவரும் ஆபத்தான பல ஆயுதங்கள்
புதிய இணைப்பு
யாழ். பல்கலைக்கழகத்தில் மேலும் பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
T - 56 ரக துப்பாக்கி ஒன்றும் இதன்போது மீட்கப்பட்டுள்ளது.
எனவே, ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த பகுதியின் கூரையின் மேற்பரப்பை முற்றாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த ஆயுதங்களை மறைத்து வைக்கப் பயன்படுத்தியிருந்த பத்திரிகை வெளியான திகதி 2005ஆம் ஆண்டினை சுட்டிக்காட்டுக்கின்றது.
எனவே இந்த ஆயுதங்கள் சுமார் 15 அல்லது 20 வருடங்களுக்கு முன்னர் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மகசின்களும் வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நேற்றையதினம் பல்கலைக்கழக நூலக பகுதியை சுத்தம் செய்தவேளை குறித்த பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பகுதிக்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடிப் படை
இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அங்கு நேற்று இரவு முதல் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அந்த துப்பாக்கி பாகங்கள் இரண்டையும், வயர்களையும் மீட்டுச் சென்றுள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 









 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        