சர்ச்சைக்குரிய கொழும்பு பிரபல பாடசாலையின் மோசமான காணொளி! வெளியான புதிய தகவல்
கொழும்பில் உள்ள ஒரு பிரபல பாடசாலையை சேர்ந்த ஒரு மாணவர் மற்றும் பெண் ஆசிரியர்களின் சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, காணொளியில் நான்கு பெண் ஆசிரியர்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், இரண்டு பேர் மட்டுமே பெண் ஆசிரியர்கள் என்றும், அவர்களும் தற்போது அந்த பாடசாலையிலிருந்து வேறு பாடசாலைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.
செய்தியின் உண்மைத்தன்மை
குறித்த மாணவரின் தந்தை ஒரு கோடீஸ்வர தொழிலதிபர் மற்றும் ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி என்று செய்திகள் பரவும் நிலையில், அதில் உண்மையில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாணவருக்கு தற்போது 19 வயது என்றும், அவர் தனது மொபைல் போனை பாடசாலையில் மாணவர் சங்கத்தில் உள்ள ஒரு லாக்கரில் விட்டுச்சென்றுள்ளதாகவும், பிரதி அதிபர் மற்றும் மாணவர் தலைவர்களுக்கு மட்டுமே அந்த லாக்கரைத் திறக்க அனுமதி உண்டு என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, இது யாரோ ஒருவர் தனிப்பட்ட பகையை தீர்த்துக்கொள்ள செய்த செயலாக சந்தேகிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக மாணவரின் தந்தை பொலிஸ் கணினி குற்றப்பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடுமையான ஒழுங்கு நடவடிக்கை
குறித்த மாணவர் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்றும், சம்பந்தப்பட்ட பெண்கள் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், இந்த காணொளி மூலம் எந்த சிறார் குற்றமும் செய்யப்படவில்லை என்றும் சட்ட வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்னர்.

இதுபோன்ற சம்பவம் தொடர்பாக பாடசாலை கட்டமைப்பிற்குள் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்வதில், ஒரு பாடசாலையைக் குறை கூறக்கூடாது என்றும்,இது வர்க்க வேறுபாடுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு குழுவினரால் செய்யப்பட்ட செயல் என்றும் சமூகவியலாளர்கள் கூறுகின்றனர்.