நாடாளுமன்றில் சிறப்புரையாற்றவுள்ள பிரதமர் ரணில்
பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் அரசியல் மறுசீரமைப்பு சம்பந்தமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 07 ஆம் திகதி சிறப்புரையாற்றவுள்ளார்.
ஜுன் மாதத்துக்கான முதல் வார நாடாளுமன்ற அமர்வு 7ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள விவாதம்
பிரதமரின் உரை உட்பட நாட்டில் நிலவும் பிரச்சினைகள் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் இடம்பெறவுள்ளது.

வருகின்ற 07 மற்றும் 08ஆம் திகதிகளில் இவ்விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் சம்பந்தமான கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று முற்பகல் நடைபெற்றது. இதன்போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இவ்வார நாடாளுமன்ற அமர்வின்போது குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்படும்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை, கடந்த மே9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தின்போது கொல்லப்பட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதமும் இதன்போது இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
| ரணிலின் இடைக்கால வரவு - செலவுத்திட்டம் 08ம் திகதி சமர்ப்பிக்கப்படும் |
| நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நியாயமான விலையில் மதிய உணவு |
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
3 வருடத்திற்கு முன் விபத்தில் உயிரிழந்த அசுரன் பட நடிகர்... திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை, வெளிவந்த உண்மை Cineulagam