நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நியாயமான விலையில் மதிய உணவு
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இனிவரும் காலங்களில் வெளியிலிருந்து வழங்கப்படும் மதிய உணவுக்காக நியாயமான கட்டணம் அறவிடப்படவுள்ளது.
நாடாளுமன்றம் கூடும் நாட்களில் இதுவரை காலமும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவச மதிய உணவு நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்பட்டு வந்தது.
எனினும் நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு குறித்த நடைமுறை தற்போதைக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

உணவுக்காக செலவிடப்பட்ட கோடி ரூபாய்
நாடாளுமன்றத்தின் நாளாந்த அமர்வுகளின் போது மதிய உணவுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டமையே அதற்கான காரணமாகும்.

இந்நிலையில் இனிவரும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது வெளியில் இருந்து தருவிக்கப்படும் உணவுக்கு நியாயமான கட்டணமொன்றை அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து அறவிட்டுக் கொள்ள கட்சித் தலைவர்களின் இன்றைய கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தியுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri