இனவாதத்திற்கு இடமளிக்க மாட்டோம்: பிரதமர் உறுதி
இனவாதத்தை மீண்டும் உருவாக்க நாங்கள் இடமளிக்கப் போவதில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று(20.04.2025) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“வடக்கில் நான் சென்ற இடமெல்லாம் மக்கள் தமது அன்பையும் ஆதரவையும் வழங்கினர். உண்மையில் இந்த பயணம் எனது குடும்பத்தாருடன் கூடி மகிழந்தது போல இருப்பதை உணர்கின்றேன்.
உட்கட்டமைப்பு வசதிகள்
நாட்டின் பொருளாதரத்தை கிராம மட்டத்தில் இருந்து அபிவிருத்தி செய்ய வேண்டும். நாட்டையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். எங்கள் பிள்ளைகளின் கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
கிராமங்களில் உள்ள சிறிய வீதிகள் திருத்தப்பட வேண்டியிருக்கிறது. இந்த வவுனியா மாவட்டம் பெரிய நகரமாக உள்ளது. அதன் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
எதிர்காலத்தில் உல்லாச பிரயாணிகளை இங்கு வரவழைக்க வேண்டிய முறைமையை நாம் உருவாக்குவோம். எனவே, அரசாங்கத்திற்கு பொருத்தமான எங்களுடன் இணைந்து செயற்படக்கூடிய சபைகளை மக்கள் உருவாக்க வேண்டும்.
பாரிய நெருக்கடி
அதன் மூலமே கிராமங்களுக்கும் விரைவான அபிவிருத்தியை கொண்டு வரமுடியும். கடந்த காலங்களில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் தற்போது பயந்து நடுங்கி கொண்டிருக்கின்றனர்.
வழமையாக தாங்கள் கைக்கொண்டது போல மீண்டும் இனவாதத்தை கைகளில் எடுத்துள்ளனர்.
மக்களிடையே குரோதங்களையும், பிரிவினைகளையும் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். எங்களோடு மக்கள் இணைந்திருப்பது அவர்களுக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam
