தோற்கடிக்க நடத்தப்படும் சதி நடவடிக்கை - பிரதமர் மஹிந்த பரபரப்பு தகவல்
பிரதமர் பதவியில் இருந்து மஹிந்தவை விலக்க குடும்பத்தினர் முயற்சிப்பதாக வெளியாகும் செய்தி தொடர்பில் பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் பிரதமர் இது தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளார்.
“2015ல் நாங்கள் தோல்வியடைந்த போது சமல் பிரதமராக பதவியேற்பார் என்றும் எங்களை அரசியலில் இருந்து நீக்குவார் என்றும் வதந்தி பரவியது.
கோத்தாவை நான் போட்டியிட அனுமதிக்க மாட்டேன் என்ற வதந்தி பரவியது. சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் காலத்திலும் இவ்வாறான அச்சங்கள் இருந்தன. அவ்வாறு கூறப்படும் விடயங்களை கண்டுக்கொள்ள வேண்டாம்.
இந்த நாட்டில் அரசாங்கங்களை தோற்கடிக்கும் போது, ராஜபக்ச எதிர்ப்பைக் கொண்டுவருகிறார். அடுத்ததாக ஒரு அரசாங்கம் அமைக்கும் போது மஹிந்த அலை தேவை. வெற்றி தோல்வி இரண்டிற்கும் ராஜபக்ஷர்கள் தேவைப்படுவார்கள். இது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. அதனை பயன்படுத்தி நாணய சுழற்சி போடுகின்றார்கள்” என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் தற்போது சுகயீனமாக இருப்பதாகவும், பதவியை கைவிடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அவ்வாறான யோசனைகள் உள்ளதா என பிரதமரிடம் வினவப்பட்டது.
“எனது அரசியலில் பிரதமர் பதவி இல்லை. இது அரசியலின் ஒரு சிறிய பகுதி. மஹிந்த ராஜபக்ஷ அரசியலை கைவிடுவார் என நினைக்கிறீர்களா? இதுபோன்ற கதைகளை உருவாக்கும் நோயாளிகளுக்கு மத்தியில் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். நான் கூறுவது உங்களுக்குப் புரியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
