நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன கொள்வனவை நிராகரித்த ஜனாதிபதி
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்யப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வாகன கொள்வனவு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த யோசனையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர்,
நாடாளுமன்றிற்கு தெரிவாகும் புதிய உறுப்பினர்களுக்கு வானங்கள் வழங்குவது வழமையான நடைமுறையாகும்.
இதன் அடிப்படையில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்யும் யோசனைத் திட்டமொன்று முன்மொழியப்பட்டது.
ஜனாதிபதி இந்த யோசனையை நிராகரித்துள்ளார். வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது.
சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாகவும் அவர் தெற்கு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.