ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் உரை....
22 ஆவது வருடாந்த பொதுநலவாய கல்வி மாநாட்டில் கலந்து கொள்ள பிரித்தானியா சென்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அமர்வில் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் (University of Oxford)உ லகளாவிய மற்றும் பிராந்திய கற்கைகளுக்கான ஒக்ஸ்போர்ட் பாடசாலையின் அமர்வில் உரை நிகழ்த்தவுள்ளதுடன் அதன் பின்னர் கல்விமான்கள் மற்றும் மாணவர்களுடனான கேள்வி பதில் அமர்விலும் கலந்துகொள்ளவுள்ளார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக உரை
அத்தோடு பிரதமர் ஹரிணி அமரசூரிய சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் (University of Sussex) அபிவிருத்தி கற்கைகள் நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்வொன்றிலும் அந்நிறுவனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் மூலம் கல்வி நிறுவனங்கள் சர்வதேச அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் பொதுநலவாய உறுப்பு நாடுகளுடன் குறிப்பாக கல்வி ஆராய்ச்சி கொள்கை உரையாடல் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் இலங்கையின் உறவை வலுப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri