த.தே.கூ கட்சியினரிடம் பிரதமர் முன்வைத்த கோரிக்கை
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் நானும் அதீத கவனத்துடன் செயற்படுவோம். எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்து செயற்பட வேண்டும் என புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி முன்னிலையில் நேற்று (22) பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களுக்கு பதிலளித்த போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
"நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தெரிவுக்கான வாக்களிப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை எடுத்த தீர்மானம் தொடர்பில் இனி நாம் பதிலளிப்பது பயனில்லை.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியாக தெரிவாகிய போது சபையில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, தன்னுடன் இணைந்து பயணிக்க சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
எனவே, ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செயற்பட வேண்டும். தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியும் நானும் அதீத கவனத்துடன் செயற்படுவோம்" என தெரிவித்துள்ளார்.