பங்களாதேஷ் பிரதமரை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர்
பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்றைய தினம் பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசீனாவை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த தொலைபேசி உரையாடல் குறித்து பிரதமர் விசேட டுவிட்டர் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
இரண்டு நாடுகளின் மக்களுக்கும் பிரதிபலன்கள் கிடைக்கும் வகையில், இலங்கைக்கும் பங்களாதேஷூக்கும் இடையிலான இருத்தரப்பு தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச அதில் கூறியுள்ளார்.
பங்களாதேஷ் இலங்கையின் உண்மையான நண்பன் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசு அண்மையில் பங்களாதேஷ் அரசாங்கத்திடம் 200 மில்லியன் டொலர்களை கடனுதவியாக கோரியிருந்தது. இந்த நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், பிரதமர் பங்களாதேஷ் பிரதமரிடம் மேலதிக ஒத்துழைப்புகளை கோரியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
