சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பிரச்சினையா.. ஊடகங்கள் மீது குற்றம் சுமத்தும் பிரதமர்
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த ஊடகங்கள் முயற்சிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்க்கட்சியுடன் தொடர்புடைய சில ஊடகங்களே, தாம் பங்கேற்ற அண்மைய நிகழ்வின் கவனத்தை ஈர்த்து, சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயற்சித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை
சீனாவின் பரம எதிரியான தாய்வானுக்கு ஆதரவான சொல்லை பயன்படுத்தியதாகவும், இது சீனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டமை தொடர்பிலேயே அவர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில், குறித்த சொல் காரணமாக, சீனாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், ஆனால் ஊடகங்களே பிரச்சினையைத் தூண்ட முயற்சிப்பதாகவும் அவர் நேற்று நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கம் நாட்டை மீண்டும் பாதையில் கொண்டு வர முயற்சிக்கும் நேரத்தில் சில ஊடகங்களின் நடவடிக்கைகள் குறித்து அமரசூரிய இதன்போது கவலை வெளியிட்டுள்ளார்.