நெடுங்கேணி பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர்
தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் கலாநிதி ஹிரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் நெடுங்கேணி பொதுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் நேற்று(20.04.2025) நடைபெற்ற பல பொதுக் கூட்டங்களில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியின் கீழ் வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
வேட்பாளர்களுக்கு ஆதரவு
அந்தவகையில், வவுனியா வடக்கு பிரதேச சபை வேட்பாளர்களுக்கு ஆதரவு வேண்டி வவுனியா, நெடுங்கேணி பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார்.
இந்தப் பொதுக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், வவுனியா வடக்கு பிரதேச சபை வேட்பாளர்கள், பொது மக்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













