ஈஸ்டர் தாக்குதல் குறித்த புலனாய்வு தகவல்களை உதாசீனம் செய்தவர்களிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான புலானய்வுத் தகவல்களை உதாசீனம் செய்த அதிகாரிகளிடம் தற்பொழுது விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்க ஆட்சிக் காலத்தில் இந்த பாதுகாப்புதுறைசார் உயர் பதவிகளை வகித்தவர்கள் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்த புலனாய்வுத் தகவல்களை உதாசீனம் செய்திருந்தனர் என தெரிவித்துள்ளார்.
அவ்வாறான அதிகாரிகளிடம் தற்பொழுது விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் அரசியல் மேடைகளில் பிரசாரத்தில் ஈடுபட்டவர்களிடம் இந்த விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வேறு விதமாக செறய்பட்டிருந்தனர் எனவும் என அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு தற்கொலை குண்டுதாரிகளின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் வேட்பாளர் என தற்பொழுது விசாரணைகளுக்கு பொறுப்பாக உள்ள அதிகாரியொருவர் அன்று கூறியிருந்தார் என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த அதிகாரிக்கு ஜே.வி.பி இன்று பதவி உயர்வு வழங்கி, உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை நடத்தும் பொறுப்பினையும் ஒப்படைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது ஜே.வி.பியைத் தவிர ஏனையவர்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்த புலனாய்வுத் தகவல்களை உதாசீனம் செய்தவர்கள் இன்று அரசியல் அடைக்கலம் பெற்றுக்கொண்டு தாங்கள் செய்த பாவத்திற்கு பிராயசித்தமாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
