ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை தலைவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
வாக்னர் கூலிப்படைக்கு தற்போது ஆள் சேர்க்கும் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும், எதிர்காலத்தில் செய்வோம் எனவும் எவ்ஜெனி பிரிகோஜின் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எங்களது அடுத்த பணிகளை இன்று நாங்கள் வரையறுக்க இருக்கிறோம், ரஷ்யாவின் பெருமையை அது நிலைநாட்டும் என்றும் உறுதியளித்துள்ளார்.
வாக்னர் கூலிப்படையினரின் கிளர்ச்சி
மேலும், ஜூன் கிளர்ச்சிக்கு பின்னர், வாக்னர் கூலிப்படையினர் கிளர்ச்சியில் ஈடுபடாதவர்கள் தேசிய இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தம் முன்னெடுக்கப்படும் எனவும் ரஷ்யா அறிவித்துள்ளது.
தற்போதைய சூழலில், ஆட்கள் பற்றாக்குறை இல்லை. ஆனால் எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் ஆட்சேர்ப்பு பணிகளை முடுக்கிவிடவும் தயாராக இருப்பதாக எவ்ஜெனி பிரிகோஜின் தெரிவித்துள்ளார்.
