இன்று முதல் மற்றுமொரு விலை அதிகரிப்பு! சற்றுமுன் வெளியான அறிவிப்பு
உற்சவ கால உணவுப் பட்டியல்களுக்கான கட்டணங்கள் இன்று (08) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உற்சவ மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அந்த சங்கத்தின் தலைவர் அகில ஜயரத்ன இதனை அறிவித்துள்ளார்.
புதிய முன்பதிவு கட்டணங்கள்
அகில இலங்கை உற்சவ மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம், பண்டிகைக் கால உணவு முன்பதிவுகளுக்கான கட்டணத்தை இன்று (08) முதல் உயர்த்த முடிவு செய்துள்ளது.

மே மாதம் முதல் மேற்கொள்ளப்படும் புதிய முன்பதிவுகளுக்கு 15% முதல் 20% வரை கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
காரணம்
ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட உணவுப் பொதிகளுக்கு 10% விலையேற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி, புதிய மதிப்புக்கூட்டு வரி திருத்தங்கள் மற்றும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள விரைவான உயர்வு ஆகியவற்றின் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் விலை உயர்வால் ஒட்டுமொத்தத் தொழிலும் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளதாகவும், தொழிலதிபர்களையும் ஊழியர்களையும் பாதுகாக்க இந்தக் கடினமான முடிவை எடுக்க வேண்டியிருந்தது என்றும் தலைவர் கூறினார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri
வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்து நிலா சொன்ன பதில், சேரன், சோழன் செய்தது என்ன?... அய்யனார் துணை சீரியல் Cineulagam