ரூ. 2,500ஐத் தாண்டுமா உலர்ந்த மிளகாய் விலை! இறக்குமதியாளர்கள் கடும் எச்சரிக்கை
இலங்கையில் உலர்ந்த மிளகாயின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தற்போது ஒரு கிலோ உலர்ந்த மிளகாயின் விலை சுமார் ரூ. 2,000 ஆக உயர்ந்துள்ளது.
முன்னர் அது 1,050 ஆக விற்பனையானது. சுங்கக் களஞ்சியங்களில் சுமார் 120 கொள்கலன்களில் உலர்ந்த மிளகாய் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
உலர்ந்த மிளகாயின் விலை
ஆவணங்கள் மற்றும் வரி செலுத்தப்பட்டும், தரநிலை தொடர்பான பிரச்சினையால் அவை விடுவிக்கப்படவில்லை.

இதனால், மிளகாய்த் தூள் உற்பத்தித் தொழிற்சாலைகள் மூலப்பொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு, சில தொழிற்சாலைகள் உற்பத்தியையும் நிறுத்தியுள்ளன.
சுங்கத்தில் தேங்கியுள்ள மிளகாய் இருப்புகளை உடனடியாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஒரு கிலோ உலர்ந்த மிளகாயின் விலை ரூ. 2,500-ஐத் தாண்டக்கூடும் என இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர்.