அதிகரிக்கவுள்ள பெரிய வெங்காயத்தின் விலை - செய்திகளின் தொகுப்பு
இலங்கைக்கு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர்.
அரசாங்கத்தின் தலையீட்டுடன் இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் வெங்காயம் கிலோ ஒன்றின் விலை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கக் கூடும் என எச்சரித்துள்ளனர்.
சந்தையில் தற்போது பெரிய வெங்காயம் கிலோவொன்று 800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், சந்தையில் தற்போது பெரிய வெங்காயத்துக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |