பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைப்புக்கு வர்த்தக மாஃபியாக்கள் இடையூறாக இருப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
பேக்கரி பொருட்களின் விலையினை நுகர்வோருக்கு நன்மை ஏற்படும் வகையில் குறைக்க கூடிய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உண்மையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தமது சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இலாபம்
கோதுமை மாவின் விலையினை மேலும் 30 ரூபாவினாலும், முட்டை ஒன்றின் விலையை 20 ரூபாவினாலும் குறைக்க முடியும். எனினும் வர்த்தக மாஃபியாக்கள் அதில் இலாபம் ஈட்டும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை கோதுமை மா, தேங்காய் எண்ணெய், முட்டை உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளுக்கு தேவையான பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இது தமது தொழிற்துறையை பாரியளவில் பாதித்துள்ளதாலேயே, பேக்கரி உற்பத்திகளின் விலையினை குறைக்க முடியாதுள்ளது.
எனவே இது தொடர்பில் விளக்கமளிப்பதற்கு சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri