சஜித்திற்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையில் ஜனாதிபதி செயலகம் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadasa) எதிராக சேறு பூசும் நடவடிக்கைகளில் ஜனாதிபதி செயலகம் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகம், சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் ஊடாக பெருமளவு பணம் செலவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதான எதிரியாக மாறிய சஜித்
சஜித் பிரேமதாசவிற்கு எதிராக கூடுதலாக பிரச்சாரம் செய்யப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆளும் கட்சியினரதும், தேசிய மக்கள் சக்தியினதும் பிரதான எதிரியாக சஜித் மாறியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமை தொடர்பில் அவர் ஏற்கனவே மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுக்கொள்ளாத பல தலைவர்கள் நாட்டை சரியான முறையில் வழிநடத்தியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
