பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல்
பல்கலைக்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வார காலப் பகுதியில் வெளியிடப்படவுள்ள நிலையில் பல்கலைக்கழக அனுமதி குறித்த மாணவர் கையேடு இன்னமும் வெளியிடப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
பரீட்சைகள் ஒத்திவைப்பு
தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக இவ்வாறு மாணவர் கையேடு வெளியிடுவது கால தாமதமாகியுள்ளதோடு, கையேட்டை வெளியிடாது மாணவர்களை அனுமதிப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என கூறப்படுகின்றது.

மேலும், கையேட்டை அச்சிட்டு வெளியிடுவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாத கால அவகாசம் தேவை என குறிப்பிடப்படுகின்றது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கல்விசாரா ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்தினால் பல்கலைக்கழக மாணவர்களின் பரீட்சைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam