பொருத்தமான ஜனாதிபதியாக இருந்தால் தேர்தலுக்கு முன்னுரிமை அளிக்க மாட்டார் – ராஜித
பொருத்தமான ஜனாதிபதி ஒருவர் பதவியில் இருந்தால் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னுரிமை அளிக்க மாட்டார் என முன்னாள் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் முதலாவதும், இரண்டாவதும், மூன்றாவதும் பொருளாதாரமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
மேலும், இந்நேரத்தில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
"இலங்கை மிக விரைவில் ஒரு பெரும் நிதி நெருக்கடி நிலைக்கு தள்ளப்படக் கூடிய சாத்தியங்கள் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இக்கட்டான தருணத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து, இந்த நெருக்கடியை எதிர்கொள்ள திட்டமிடல் அவசியம்," என ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri