பயங்கரவாத தடைச் சட்டம் என்ற மிகப் பெரிய கொடூரமான சட்டத்துக்குள் நாங்கள் வாழ்கின்றோம் : சிவஞானம் சிறீதரன் (Photos)

People Kilinochchi shritharan SL preventionofterrorismact
By Sudaron Feb 20, 2022 07:35 PM GMT
Report

பயங்கரவாத தடைச் சட்டம் என்ற மிகப் பெரிய கொடூரமான சட்டத்துக்குள் இந்த நாட்டில் நாங்கள் வாழ்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னனியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினால் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி கையெழுத்திடும் மக்கள் போராட்டத்தில் கிராம மட்டங்களில் கையெழுத்திடும் ஆரம்ப நிகழ்வு இன்று (20) மாலை கிளிநொச்சி யூனியன் குளம் முருகன் ஆலயத்தில் நடைபெற்றுள்ளது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச்சட்டம் என்பது எங்கள் நாட்டில் எங்களுக்கு முன்னால் தலைவிரித்தாடி எங்கள் குழந்தைகள் எங்களது சகோதரர்கள் உறவுகள் குடும்பத் தலைவர்கள் எல்லோரையும் இந்த சட்டம் கொன்றுள்ளது.

இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தில் இருந்து நாங்கள் விடுபடுவதற்காக 44 வருடங்கள் போராடி இருக்கின்றோம். தற்காலிக ஏற்பாடாக தமிழர்களுக்கு எதிராக இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இலங்கை அரசால் கொண்டு வந்து நிறைவேற்றியது இது மிகப்பெரிய பயங்கரமான ஒரு சட்டம் எமது மக்களைத் தொடர்ந்தும் பலியெடுக்கின்றது.

எமது இளம் சமூகம் தங்களுடைய இளமையை சிதைத்து சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காணாமல் போயிருக்கிறார்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் இதற்குக் காரணம் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இந்த சட்டத்தை நீக்குவதற்கு கையெழுத்து பெறும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் பச்சிலைப் பள்ளி தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் யூனியன் குளம் கோணாவில் பிரதேசத்தின் வட்டார அமைப்பாளர் பிரபா, கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். 


GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US