நான் யாரிடமும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளேன் என தெரிவிக்கவில்லை: விக்னேஸ்வரன் பகிரங்கம்
நான் யாரிடமும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளேன் என தெரிவிக்கவில்லை. ஆனால் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் அவ்வாறு கோரிக்கை வைத்தால் அதை செயற்படுத்துவேன் என்றே கூறினேன் என நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று(26.12.2023) கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த வாரம் என்னுடன் சில ஊடகவியலாளர்கள் வந்து உரையாடினார்கள். பல்வேறுபட்ட கேள்விகளை எழுப்பினர் அவை அனைத்திற்கும் நான் பதிலளித்திருந்தேன்.
அப்போது தான் அவர்கள், தமிழ் மக்கள் சார்பில் யாராவது ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குகின்றார்களா? என கேள்விகளை எழுப்பினர். ஒருவரின் பெயரை கூறி அவரை வேட்பாளராக களம் இறக்கினால் நல்லது.

அவர் இலங்கைக்காக சர்வதேச ரீதியில் தங்கப் பதக்கத்தினை வென்ற ஒருவர் என்பதனால் அனைவரும் அறிந்திருக்கக் கூடிய ஒருவர் என்ற ரீதியில் வேட்பாளராக களமிறக்க விரும்பினேன்.
ஆனால் நான் அவரை தொடர்பு கொண்டு வினவிய போது தனது சுகயீனம் காரணமாக முடியாது என கூறிவிட்டார் எனக்கூறினேன்.
அப்போது ஊடகவியலாளர்கள், உங்களை களமிறங்குமாறு ஏனைய கட்சிகள் கேட்டால் உங்களது நிலைப்பாடு என்ன என்று வினவினர்.

அவ்வாறு வினவியமைக்குதான் நான்,அனைத்து கட்சியினரும் என்னை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குமாறு கூறினால் நான் அதை செயற்படுத்துவேன் என கூறினேன்.
அது தவிர எந்த சந்தர்ப்பத்திலும் நான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க உள்ளேன் என தெரிவிக்கவில்லை. அதனை ஊடகவியலாளர்கள் தான் கேட்டார்கள் அவர்களே செய்தியாக பிரசுரித்துள்ளார்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam