மாயையை கிழித்திருக்கின்ற சர்வதேச நீதிமன்றத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்: அமைச்சர் டக்ளஸ்

Douglas Devananda Sri Lanka World Gaza
By Kajinthan Jan 28, 2024 06:50 PM GMT
Report

சர்வதேச நீதிமன்றம் தொடர்பான அர்த்தமற்ற எதிர்பார்ப்புக்களே தமிழ் அரசியல் தரப்புக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படுகின்றன.

இவ்வாறான மாயைகளை தொடர்ந்தும் நம்பிக் கொண்டிருக்காமல் தீர்வுகளை அடைவதற்கான நடைமுறைச் சாத்தியமான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் என கடற்றொழிலமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

காசா மீது இஸ்ரேல் முன்னெடுத்து வருகின்ற தாக்குதல் தொடர்பாக தென்னாபிரிக்காவினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டாவாறு குறிப்பிட்டுள்ளார்.

வாக்கெடுப்பின் மூலமே செயலாளர் தெரிவு: விட்டுக் கொடுப்பிற்கு இடமில்லை சிறிநேசன் பகிரங்கம்

வாக்கெடுப்பின் மூலமே செயலாளர் தெரிவு: விட்டுக் கொடுப்பிற்கு இடமில்லை சிறிநேசன் பகிரங்கம்

தமிழ் மக்களுக்கான நீதி 

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த 14 வருடங்களுக்கு மேலாக சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுத் தரப்படும் என்ற கோஷங்களை சில தமிழ் தரப்புக்கள் மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றன.

மாயையை கிழித்திருக்கின்ற சர்வதேச நீதிமன்றத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் | Press Meet Douglas Devananda

குறிப்பாக இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற உயிரிப்புக்களுக்கான நீதி மற்றும் காணாமல் போனோருக்கான பரிகாரம் போன்றவற்றை சர்வதேச நீதிமன்றத்தின் மூலமே பெற்றக்கொள்ள முடியும் எனவும் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை கொள்ள முடியாது எனவும் சொல்லுகின்ற தமிழ் அரசியல் தரப்புக்கள், தமிழ் மக்கள் மத்தியில் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான மாயையை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

மாயையை கிழித்திருக்கின்ற சர்வதேச நீதிமன்றத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் | Press Meet Douglas Devananda

இஸ்ரேல் விவகாரம்

தற்போது, இஸ்ரேல் விவகாரத்தில் தென்னாபிரிக்காவினால் சர்வதேச நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கிற்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது, சர்வதேச நீதிமன்றின் சிந்தனை மற்றும் பார்வை எத்தகையது என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது.

ஆயிரக்கணக்கான மக்களை தினமும் அழித்துக் கொண்டிருக்கிற தாக்குதல்களை நிறுத்துமாறு உலகின் அதியுச்ச நீதிமன்றக் கட்டமைப்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிடவில்லை.

மாயையை கிழித்திருக்கின்ற சர்வதேச நீதிமன்றத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் | Press Meet Douglas Devananda

இனப்படுகொலை மற்றும் யுத்த குற்றம் தொடர்பான சர்வதேச நியமங்களை மதித்து நடக்குமாறு சொல்லியிருக்கிறது.

காசாவில் குறுகிய பிரதேசத்தில் பல இலட்சம் அப்பாவி மக்கள் செறிந்து வாழ்கிறார்கள் என்பதோ, தாக்குதல் தொடர்ந்தால் அப்பாவி மக்களின் அழிவுகள் தவிர்க்க முடியாதவை என்பதோ சர்வதேச நீதிமன்றிற்கு தெரியாத சமாச்சாரங்கள் இல்லை.

மாயையை கிழித்திருக்கின்ற சர்வதேச நீதிமன்றத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் | Press Meet Douglas Devananda

அப்படியிருந்தும் தாக்குதலை நிறுத்துமாறு தீர்ப்பில் சொல்லப்படவில்லை. இவ்வாறான சம்பங்கள் ஊடாக, சர்வதேச கட்டமைப்புக்களின் மனோநிலையையும் அவற்றின் நிகழ்ச்சி நிரல்கள் எத்தகையவை என்பதையும் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

என்னை தீர்மானித்தது இந்தியா அல்ல! யாருடனும் இணையத் தயார் - சிறீதரன் அறிவிப்பு

என்னை தீர்மானித்தது இந்தியா அல்ல! யாருடனும் இணையத் தயார் - சிறீதரன் அறிவிப்பு

இலங்கை வாழ் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கை வாழ் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US