அரச வருமான நிறுவனங்களில் ஊழலை ஒழிக்க ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல்
இலங்கையின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளைப் பலப்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தின் பிரதான வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் நிறுவப்பட்டுள்ள 'உள்ளக விவகாரப் பிரிவுகளின்' செயற்பாடுகள் மற்றும் '2025 - 2029 ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம்' குறித்த விசேட மீளாய்வுக் கலந்துரையாடல் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கை சுங்கம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகிய வருமானம் ஈட்டும் நிறுவனங்களின் தற்போதைய செயற்பாடுகள் விரிவாக ஆராயப்பட்டன.
இலங்கையில் இரவில் நடந்த மர்ம சம்பவம்! திடீரென யாருமின்றி நகர்ந்து சென்ற தொடருந்து - ஆபத்திலிருந்து தப்பிய மக்கள்
உத்தியோகபூர்வ நடவடிக்கைகள்
இந்நிறுவனங்களில் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும், நேர்மையான நிர்வாகக் கலாசாரம் ஒன்றை உறுதிப்படுத்துவதற்கும் தற்போது எடுக்கப்பட்டுள்ள உத்திகள் குறித்து இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.

அத்துடன், பொது நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைப் பேணி, இந்நிறுவனங்களில் தொடர்ந்தும் நேர்மையான கலாசாரத்தை நிலைநிறுத்துவதற்காக எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. எஸ். கே. லியனகம, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் ஆர். பி. எச். பெர்னாண்டோ, மதுவரி ஆணையாளர் நாயகம் எம். பி. என். ஏ. பேமரத்ன உட்பட அந்தந்த நிறுவனங்களின் உள்ளக விவகாரப் பிரிவுகளின் பிரதானிகளும் கலந்து கொண்டனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri