ஜனாதிபதி ஊடக விருது பெற்ற ஐபிசி தமிழின் சிரேஸ்ட ஊடகவியலாளர்
தொலைக்காட்சிப் பிரிவில் வருடத்தின் சிறந்த தமிழ் மொழிமூல நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான விருதினை, ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப்பிரிவு முகாமையாளர் சர்மிலா வினோதினி பெற்றுள்ளார்.
பத்திரிகை மற்றும் ஒளிபரப்பில் சிறந்து விளங்குபவர்களைக் கொண்டாடும் வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி ஊடக விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை நடைபெற்றது.
இலங்கையின் ஊடகத் துறையில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இரவைக் குறிக்கும் வகையில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
பலர் பங்கேற்பு
அதில், பிரதமர் ஹரிணி அமரசூரிய பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன், வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன் கலந்து கொண்டனர்.

இந்த விருதுகள் 2023ஆம் ஆண்டிற்கான மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களில் சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நேர்மை, படைப்பாற்றல் மற்றும் தாக்கத்தில் அளவுகோல்களை அமைத்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களை முன்னிலைப்படுத்தும் வகையிலும் இவ்விருது வழங்கும் விழா இடம்பெற்றிருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri