சஜித் தரப்பு ஆதரவை பெற தொடர்ந்து முயலும் ரணில்
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 17 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தம்பக்கம் இழுத்து கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மேற்கொள்ளும் முயற்சி வெற்றியளிக்கவில்லை என கூறப்படுகின்றது.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் மேடையேற்றும் நோக்கிலேயே நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், ஓரிருவர் மாத்திரமே ஜனாதிபதி ரணிலுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல்
இதற்கிடையில், ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சியால் ஆலோசனை நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனம் மூலம் எதிரணியில் இருந்து ஆதரவு வழங்கும் உறுப்பினர்களைக் கூடிய விரைவில் தம்வசம் இழுப்பதற்கான வழிகள் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், எதிரணி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena), சாகல ரத்னாயக்க (Sagala Ratnayaka), ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர் என கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |