விசேட கலந்துரையாடல் மூலம் இன்று எடுக்கப்படவுள்ள இறுதி தீர்மானம்
இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில், இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை அரசாங்கத்தின் ஊடாக இறக்குமதி செய்வதா அல்லது தனியார் மூலம் இறக்குமதி செய்வதா என்பது தொடர்பில் இறுதி தீர்மானிக்கப்படும் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி
இதற்கிடையில், இறக்குமதி செய்யப்படும் இந்திய பெரிய வெங்காயத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு 10 முதல் 15 நாட்கள் வரையாகும் என அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 10,000 மெட்ரிக் டன் பெரிய வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில், பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததன் மூலம், நாட்டில் பெரிய வெங்காயத்தின் விலையும் சடுதியதாக அதிகரித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
