ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவித்த ரணிலுக்கு நெருங்கிய அமைச்சர்
இந்த வருடம் ஒக்டோபர் 05ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக சுற்றுலா, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.
காலியில் (Galle) நேற்று (14.06.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எனினும், இது இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் முடிவா என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
ரணில் விக்ரமசிங்க
பெரும்பாலும் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு ஜூலை மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமோக வெற்றியீட்டுவார் என்றும் அவரின் வெற்றியை உறுதிப்படுத்தி காட்டுவதாகவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணைக் கடன் அனுமதிக்கப்பட்டமை குறித்து கருத்துரைத்த அவர், பலரின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இது சாத்தியமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்: டக்ளஸ் சுட்டிக்காட்டு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri