பொதுஜன பெரமுனவில் வேட்புமனு தாக்கல் செய்ய விரும்பாத கோட்டாபய! வெளியான தகவல்
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கோட்டாபய ராஜபக்ச தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுஜன பெரமுனவின் பலம்
கடந்த முறை பொதுஜன பெரமுனவினால் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட போதும், அவரால் அந்த பதவியை தொடர முடியவில்லை.
இதன் காரணமாக கோட்டாபய ராஜபக்ச மீண்டும் பொதுஜன பெரமுனவில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்ய விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் பலம் காரணமாகவே கோட்டாபய ராஜபக்சவுக்கு மாத்திரம் இன்றி மகிந்த ராஜபக்சவுக்கும் 69 இலட்சம் வாக்குகள் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
