அமெரிக்க விமான நிலையத்தில் திருட்டில் ஈடுபடும் அதிகாரிகள்: வெளியாகிய அதிர்ச்சி காணொளி
அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் அதிகாரிகள், பைகளில் இருந்து பணம் மற்றும் பொருட்களை திருடும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூன் 29 அன்று நடந்த இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ய எக்ஸ்ரே இயந்திரத்தில் வைக்கும் போது, அதனை இருவரும் சோதனை செய்கின்றனர்.
பொலிஸார் விசாரணை
அப்போது ஒவ்வொரு பைகயையும் சோதனை செய்யும் போது இருவரும், அதில் இருந்து கிடைக்கும் பணத்தை திருடி தங்களது பைகளில் வைத்து கொள்ளும் காட்சி சிசிரீவி கருவியில் பதிவாகியுள்ளது.
? The theft of dollars by security officers from passengers' luggage at #Miami airport
— Negar? (@negin_m1358) September 15, 2023
? America#MiamiFL #MiamiDade #miamitstheerastour#Vikings #BrianJohnson #Addison#BB25 #Philly pic.twitter.com/f8qlf3HtlE
இதனையடுத்து அவர்களை அந்நாட்டு பொலிஸார் கைது செய்து விசாரணை செய்தபோது , தினமும் சராசரியாக ஆயிரம் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.