சிங்கப்பூரில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் தொடர்பான தகவல்
சிங்கப்பூரில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இலங்கை பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணை நேற்று முன்னெடுக்கப்பட்டது.
நீர்கொழும்பு பதில் நீதவான் நெல்சன் குமாரநாயக்கவினால் நீர்கொழும்பு வைத்தியசாலையில் மரண விசாரணை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி தியவன்னா மல்வல பகுதியில் வசிக்கும் செவ்வந்தி மதுக குமாரி என்ற 33 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மனைவி கொலை
இந்த பெண் தனது கணவரின் வேண்டுகோளுக்கு இணங்க சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கழுத்தை அறுத்து அந்த நபர் கொலை செய்தது தெரியவந்தது.

இவர்கள் இருவரும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 2022ஆம் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அதன் பின்னர், கணவரின் வேண்டுகோளின் பேரில், அந்த பெண் கடந்த 8ஆம் திகதியன்று சிங்கப்பூருக்கு இந்த பயணத்தில் இணைந்துள்ளார்.
பெண்ணின் சடலம்
கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நீர்கொழும்பு வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை இரத்தினபுரி பொது மயானத்தில் தகனம் செய்வதற்காக இறந்தவரின் தந்தையிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam