ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ஜனக! பதவி விலக்கப்பட்ட பின்னர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஜனக ரத்நாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டமை இலங்கை மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனக்கவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்
இது எனதுதோல்வியில்லை இது இலங்கையின் அனைத்து மக்களினதும் தோல்வி இதனை பற்றி எனக்கு எந்த பிரச்சினையுமில்லை என அவர் கூறினார்.
ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவேன் என நான் முன்னரே உறுதியாக தெரிவித்துள்ளேன் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(24.05.2023)நிறைவேற்றப்பட்டுள்ளது.
46 மேலதிக வாக்குகளால் குறித்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.