கேப்பாப்பிலவு கிராம காணி பிரச்சினையைத் தீர்க்க ஜனாதிபதி நடவடிக்கை

Sri Lankan Tamils Mullaitivu Ranil Wickremesinghe
By Dharu May 26, 2024 11:10 AM GMT
Report

கேப்பாப்பிலவு கிராமத்தில் காணி பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) முல்லைத்தீவு மாவட்டத்தில் "உறுமய" வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திற்குச் சென்ற போது, ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும் எனக்கூறி அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள், கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இரகசிய கூட்டத்திற்காக கொழும்பிற்கு அழைக்கப்பட்ட மொட்டு உறுப்பினர்கள்!

இரகசிய கூட்டத்திற்காக கொழும்பிற்கு அழைக்கப்பட்ட மொட்டு உறுப்பினர்கள்!


ஜனாதிபதியிடம் கோரிக்கை

இது குறித்து அறிந்த வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், இரு பெண்களும் இருந்த இடத்துக்குச் சென்று அவர்களின் பிரச்சினை வினவ, அதன்போது அவர்களின் பிரச்சினையை ஜனாதிபதியிடம் முன்வைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கேப்பாப்பிலவு கிராம காணி பிரச்சினையைத் தீர்க்க ஜனாதிபதி நடவடிக்கை | Presidential Action Resolve Kepapilau Land Issue

அதனையடுத்து, வடமாகாண ஆளுநரால் இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) போராட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.

காணிப் பிரச்சினை காரணமாக தாம் உட்பட கேப்பாப்பிலவு கிராமத்தில் வசிக்கும் 56 குடும்பங்கள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், எனவே இதற்கு உடனடியாக தீர்வு காண ஏற்பாடு செய்யுமாறும் குறித்த பெண்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “இந்தப் பிரச்சினையை விரைவாகக் கண்டறிந்து அதற்குத் தீர்வுகாணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணிக்கு திட்டமிடும் விமல் தரப்பு: பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் அழைப்பு

புதிய கூட்டணிக்கு திட்டமிடும் விமல் தரப்பு: பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் அழைப்பு

அரசாங்கம் நடவடிக்கை

அத்துடன், வடமாகாணத்தில் பெருமளவிலான காணிகளை விடுவிக்க அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எஞ்சியுள்ள காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கேப்பாப்பிலவு கிராம காணி பிரச்சினையைத் தீர்க்க ஜனாதிபதி நடவடிக்கை | Presidential Action Resolve Kepapilau Land Issue

இந்நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்ட தம்மை சந்தித்து, தமது பிரச்சினைகளைக் கேட்டறிந்து தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்தமைக்கு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தமது நன்றியை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக விசேட விசாரணை

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக விசேட விசாரணை

அரச நிறுவனங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள யோசனை

அரச நிறுவனங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள யோசனை

மேலதிக தகவல் - கீதன்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
Gallery
மரண அறிவித்தல்

கொடிகாமம், Horsens, Denmark

06 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

06 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Markham, Canada

03 Jun, 2024
மரண அறிவித்தல்

நீர்வேலி, Recklinghausen, Germany

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

08 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States, Gronau, Germany

07 Jun, 2024
மரண அறிவித்தல்

மண்டைதீவு, வண்ணார்பண்ணை, Walthamstow, United Kingdom

04 Jun, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு, நல்லூர், London, United Kingdom

27 May, 2024
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, Toronto, Canada

03 Jun, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

மூளாய், திருகோணமலை, கொழும்பு

09 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் வடக்கு

10 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், முரசுமோட்டை, வவுனியா

11 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Toronto, Canada

07 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை, London, United Kingdom

11 Jun, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

06 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US