ஜனாதிபதி இந்த மாத இறுதியில் வடக்கிற்கு விஜயம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இம்மாதம் இறுதி வாரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டிடம் ஒன்றை திறந்து வைத்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
பாதுகாப்பு நிலைமைகள்
யாழ்.போதனா வைத்தியசாலையிலும் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்றை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.
யாழ்ப்பாண விஜயத்தின் போது வலி வடக்கு பகுதியில் ஒட்டகப்புலத்துக்குச் செல்லும் பிரதான பாதையினையும் உத்தியோபூர்வமாக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இடம் பெற உள்ளது.
ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் தற்போதைக்கு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்து, ஜனாதிபதியின் விஜயம் தொடர்பான பாதுகாப்பு நிலைமைகளை அவதானித்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 15 மணி நேரம் முன்

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri
