கோட்டாபய நாடு திரும்புவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் வெளியிட்டுள்ள தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பினால் அரசியல் பதற்ற நிலை மேலும் அதிகரிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபயவுடன் தொடர்பு
கோட்டாபய ராஜபக்சவுடன் தொடர்பில் இருப்பதாகவும், நாடு திரும்பும் திட்டம் பற்றி அவர் எதனையும் கூறவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாடு திரும்புவதற்கு இது பொருத்தமான தருணம் என தாம் கருதவில்லை எனவும், நாடு திரும்புவது தொடர்பில் அவர் எதனையும் குறிப்பிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை திரும்புகின்றார் கோட்டாபய ராஜபக்ச - வெளியாகியுள்ள தகவல்கள் |
அதிஷ்டத்தால் ஜனாதிபதி பதவி
இதேவேளை அதிஷ்டம் காரணமாக தாம் ஜனாதிபதியானதாக தெரிவித்துள்ளார்.
அப்போதைய ஜனாதிபதி பதவி விலகியதன் காரணமாக தாம் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.