மக்களின் ஆணையினை இழந்த ஒரு ஜனாதிபதி இலங்கையில்: தேர்தல் வன்முறைகள் மற்றும் கண்காணிப்பு மையம் சுட்டிக்காட்டு
மக்களின் ஆணையினை இழந்த ஒரு ஜனாதிபதியும் நாடாளுமன்றமும் இலங்கையில் இருப்பதாக தேர்தல் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்கான நிலைய பணிப்பாளர் ஏ.எம். விக்டர் கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும கருத்து தெரிவிக்கையில்,
“இலங்கையில் தேர்தல் காணாமல் செய்யப்படுகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது.எந்த தேர்தல் எடுத்து பிற்போடும் ஒரு கலாசாரம் உருவாகியுள்ளது.
தேர்தல் ஆண்டு
இந்த வருடம் எடுத்துக்கொண்டால் இது ஒரு தேர்தல் ஆண்டாகத்தான் காணப்படுகின்றது.
தற்போது மக்களின் ஆணையினை இழந்த ஒரு ஜனாதிபதியும் பாராளுமன்றம் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். எனவே எனவே இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலோ அல்லது நாாடளுமன்ற தேர்தலோ நடைபெற வேண்டும்.
ஆகவே மக்களின் ஜனநாயக உரியினை மக்;கள் கேட்க வேண்டும் என்பதனை நாங்கள் நாடு பூராகவும் தெளிவு படுத்தி வருகிறோம்.
இந்த வருடம் தேர்தல் நடைபெறும் என்பதனையும் நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
இந்த நிகழ்வின் தொகுப்பினை அறிவிப்பாளர் எஸ். கலாதேவன் மேற்கொண்டார். இந் நிகழ்வுக்கு தேர்தல் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் முஹமட்,சிவசக்தி பவுண்டேசன் பணிப்பாளர் செல்வராஜ்,உட்பட பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |