கண்டி தலதா பெரஹரா இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொண்ட ரணில்
வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா பெரஹராவை பார்வையிட மக்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டி தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா நேற்று (19) இரவு நடைபெற்றுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள்
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து பெரஹராவைக் கண்டுகளித்துள்ளார்.
இந்நிகழ்வில் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான அனுராத ஜயரத்ன, திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தே, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
