ஜனாதிபதி நாளை வியட்னாமுக்கு விஜயம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura kumara Dissanayake), நாளை(4) வியட்னாமுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
வியட்னாமின் ஹோசிமின் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் கொண்டாட்டங்களின் பிரதான அதிதியாக ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.
வியட்னாமுக்கு விஜயம்
அத்துடன் வியட்னாம் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன் இலங்கையர்களுக்கு வியட்னாமில் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் வர்த்தக சமூகப் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது பங்கேற்கவுள்ளனர்.
எதிர்வரும் ஆறாம் திகதி வரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வியட்னாமில் தங்கியிருப்பார் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
