மோடியை உணர்ச்சிப்பூர்வமாக வரவேற்ற உக்ரைன் ஜனாதிபதி
ரஷ்யாவுடனான இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு தீர்வை முன்வைத்து, இன்று உக்ரைன் தலைவர் வோலோடிமிர் செலென்ஸ்கியை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) கிய்வ் நகரில் வைத்து சந்தித்தார்.
உக்ரைனுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் முதன்முறையாக விஜயம் செய்தபோது, கியேவில் உள்ள மரின்ஸ்கி அரண்மனையில் வைத்து செலென்ஸ்கி, மோடியை உணர்ச்சிப்பூர்வமாக வரவேற்றார்.
போர் நிறுத்தம்
இந்தியத் தலைவர் தன்னை மொஸ்கோவிற்கும் கியேவிற்கும் இடையில் சமாதானம் செய்பவராகக் காட்டிக் கொள்ளும் நிலையிலேயே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
எனினும் சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.
இந்தநிலையில், "போர்க்களத்தில் எந்த பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்று போலந்தில் இருந்து கிவ் நகருக்கு செல்லும் முன்னர் மோடி கூறியுள்ளார்.
எனவே அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பதற்கான உரையாடல் மற்றும் இராஜதந்திரத்தை இந்தியா ஆதரிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, மோடி, கடந்த மாதம் மொஸ்கோவில் ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்தார். இதன் போதும் போர் நிறுத்தம் தொடர்பில் அவர் வலியுறுத்தலை விடுத்திருந்தார்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
