ஷேக் ஹசீனாவின் கடவுச்சீட்டு ரத்து : இடைக்கால அரசின் அதிரடி முடிவு
ஷேக் ஹசீனாவின்(Sheikh Hasina) அனைத்து தூதரக கடவுச்சீட்டுகளையும் பங்களாதேஷ் இடைக்கால அரசு ரத்து செய்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பங்களாதேஷில் 30 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக போராட்டம் வெடித்தது.
இந்நிலையில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.
பதவி விலகல்
குறித்த போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நெருக்கடி அதிகரித்ததால், பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா பதவி விலகல் செய்தார்.
அதே நாளில், நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து, வங்காளதேசத்தில் முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு அமைத்துள்ளது.
இதனையடுத்து ஷேக் ஹசீனாவின் அனைத்து தூதரக கடவுச்சீட்டுகளையும் வங்கதேச இடைக்கால அரசு ரத்து செய்தது.
மேலும், ஷேக் ஹசீனாவின் அமைச்சரவையில் இருந்த முன்னாள் எம்.பி.க்கள் அனைவரின் கடவுச்சீட்டுகளையும் இடைக்கால அரசு ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.