இந்தோனேசியா பயணமாகும் ஜனாதிபதி
இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் (18) இந்தோனேசியா பயணமாகவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் (Joko Widodo) அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்கிறார்.
"கூட்டு செழுமைக்கான நீர்" என்ற தொனிப்பொருளில் 10 ஆவது உலக நீர் மாநாடு மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறவுள்ளது.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்தோனேசிய ஜனாதிபதி உள்ளிட்ட அந்நாட்டின் பல உயர்மட்ட பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.
ஜனாதிபதியுடனான விஜயத்தில் ஜனாதிபதி செயலக மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவொன்றும் இணைந்து கொள்கிறமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri