சுற்றாடல் அமைச்சு தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம் : வெளியான வர்த்தமானி
சுற்றாடல் அமைச்சு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிரடி தீர்மானம் ஒன்றை அறிவித்துள்ளார்.
சுற்றாடல் அமைச்சினை தனது மேற்பார்வையின் கீழ் கொண்டு வருவதாக அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பதவி இழந்த நஸீர்
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இந்த அதி விஷேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன உடன் கலந்தாலோசனை நடத்தி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் அமைப்பின் 44 (3) சரத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றாடல் அமைச்சராக கடமையாற்றி வந்த நஸீர் அஹமட் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்திருந்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் நஸீர் அஹமட் பதவி இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
வாணி ராணி சீரியல் நடிகர் முரளியை நினைவிருக்கிறதா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் பேட்டி Cineulagam