அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு ஜனாதிபதி ஆதரவு : ஜனாதிபதிக்கு எதிரான கடும் குற்றச்சாட்டுக்கள்
அரிசி ஆலை உரிமையாளர்களிடம் இருக்கும் அரிசியை வெளியில் கொண்டுவர முடியாமல் அவர்களுக்கு கிலாேவுக்கு 10 ரூபா அதிகரித்து ஜனாதிபதி ஆதரவு வழங்கியுள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அரிசி ஆலை உரிமையாளர்கள்
அரிசி ஆலை உரிமையாளர்கள் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் அரிசியை சந்தைக்கு விடுவிக்காமலிருந்ததால் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அத்துடன் அரிசி விலையும் ஒரு கிலோ 260 ரூபா வரை அதிகரித்தது.
இதனை கட்டுப்படுத்துவதாகத் தெரிவித்து ஜனாதிபதி அரிசி ஆலை உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, அரிசிக்கு விலை நிர்ணயம் செய்வதாக தெரிவித்து, மேசையில் தட்டி, ஒரு கிலோவுக்கு 10 ரூபா அதிகரித்துள்ளார்.
ஜனாதிபதி இதன் மூலம் அரிசி ஆலை உரிமையாளர்களிடம் இருக்கும் அரிசியை வெளியில் கொண்டுவர முடியாமல் இதனை செய்துள்ளார்.
அத்துடன் அரிசி இறக்குமதி செய்வதாக இருந்தால் அரசாங்கம் ஒன்று எதற்கு என கேட்ட தேசிய மக்கள் சக்தி, தற்போது அரிசி தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த 70 ஆயிரம் கிலோ அரிசி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
