மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கி வைப்பு
வறிய மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கிலான ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் மன்னார் (Mannar) மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு, இன்றைய தினம் (17.07.2024) காலை இரு பிரிவுகளாக மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
நாடு முழுவதும் உள்ள வறிய மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் மன்னார், மடு ஆகிய இரு கல்வி வலயங்களையும் உள்ளடக்கி 830 மாணவர்கள் இத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர்.
கலந்து கொண்டோர்
மன்னார் கல்வி வலயத்தில் 428 மாணவர்களும் மடு கல்வி வலயத்தில் 402 மாணவர்களும் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதி புலமைப்பரிசில் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

















