திருகோணமலையில் வான் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு
திருகோணமலை - கந்தளாய், அக்போபுர கித்துள் ஊற்று பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் இன்று(17.07.2024) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணை
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வான் மோதியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அக்போபுர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, கந்தளாய் கித்துளுத்து பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வான் சாரதி நித்திரை கொண்டமையினால் சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது மோதியதில் பெண் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கித்துள் ஊற்று பகுதியில் தற்போது விபத்து இடம்பெற்ற அதே இடத்தில் கடந்த பதினைந்து நாட்களில் மூன்று விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும்,பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri