மட்டக்களப்பு மாவட்ட ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் பிரதான நிகழ்வு
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 1500 மாணவர்களுக்கு ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் பிரதான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன் தலைமையில் செவ்வாய்கிழமை (16.07.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 1500 மாணவர்களுக்கு ஜனாதிபதி புலமைப்பரிசில் கலந்து கொண்ட அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
செந்தில் தொண்டமான் கருத்து
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அலி சாகிர் மௌலானா மற்றும் அதாவுல்லா, பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி இந்த ஊக்குவிப்பு தொகை அடுத்த வருடம் இரண்டு மடங்காக வழங்க உள்ளார். அதனை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை கல்விக்காக உங்களது கல்வி மூலம் தான் இந்த நாட்டிற்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் உள்ளது என இதன்போது செந்தில் தொண்டமான் கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |