வழங்கப்படும் வாய்ப்பில் தவறுகளை நிறுத்தாவிட்டால்...! ஜனாதிபதியின் கடுமையான எச்சரிக்கை
தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படும், அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பொலிஸ் அதிகாரிகள் தவறுகளைத் திருத்திக்கொள்ள தவறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை பொலிஸின் 159வது ஆண்டு நிறைவு தினம் இன்று (3) கொண்டாடப்படுகிறது. இந்த திகதி இலங்கை பொலிஸின் ஸ்தாபக நாளாகக் கருதப்படுகிறது.
சட்ட நடவடிக்கை
இதனை நினைவுகூரும் வகையில், இன்று பொலிஸ் களப் படை தலைமையகத்தில் விசேட நினைவு விழா ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விழாவில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது, போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து சதி செய்யும் பொலிஸ் அதிகாரிகள் தமது தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படும்.
அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பொலிஸ் அதிகாரிகள் தவறுகளைத் திருத்திக்கொள்ள தவறினால், அவர்களை சேவையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri