ஜனாதிபதி சர்வதேசத்திடம் முன்வைத்துள்ள அவசர வேண்டுகோள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சர்வதேச சமூகத்திடம், தடுப்பூசி ஏற்றுகையில் வசதி குறைந்த நாடுகளுக்கு உலக சமூகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவசர வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.
இன்னும் காத்திரமான வகையில் வசதி குறைந்த நாடுகளுக்கு சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
5ம் இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது ஜனாதிபதி இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளின் பெருந்தன்மையை வரவேற்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு இந்த நாடுகள் நேரடியாகவும், கோவேக்ஸ் திட்டத்தின் ஊடாகவும் தடுப்பூசிகளை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில நாடுகளில் தடுப்பூசி ஏற்றுகையில் காணப்படும் மந்த நிலைமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சில நாடுகளில் தடுப்பூசி ஏற்றுகை காலம் தாழ்த்தப்படுவதனால் புதிய திரிபுகள் பரவும் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது பயன்படுத்தப்படும் தடுப்பூசி புதிய ஒமிக்ரோன் திரிபினை கட்டுப்படுத்த தவறினால் மீண்டும் முடக்கநிலைகள், கட்டுப்பாடுகள் அறிவிக்க நேரிடும் எனவும் இது பாரதூரமான நிலைமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே புதிய திரிபு குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செல்வந்த நாடுகள், வசதி குறைந்த நாடுகளுக்குக் காத்திரமான முறையில் தடுப்பூசி ஏற்றுகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்படும் வரையில் கோவிட் பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வர முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
